KOLNews

விவசாயிகள் தலையில் விழபோகும் அடுத்த இடி..! - வங்கி கடனில் மாற்றம்..!

இந்தியா ஒரு விவசாய நாடு என்று பெருமை பேசிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் அப்போதே சிறு விவசாயிகள் வாழ்க்கை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். எப்போதும் முப்போகம் விளையும் என சொல்லமுடியாது. பஞ்சம் மற்றும் வெள்ளம் பாதித்த காலங்களில் விவசாய நிலங்களையே அடமானம் வைத்து பின் அதை மீட்க முடியாமல் பண்ணையார்களிடம் நிலத்தையும் கொடுத்து , அதே நிலத்தில் கூலிக்கு வேலை செய்யும் அவலத்தையும், பின் அவர்கள் பல இடங்களில் கொத்தடிமைகளாக மாறிய அவலத்தையும் நாம் பார்த்துள்ளோம்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கிது ஓரளவு விவசாயிகளை பெருமூச்சடைய வைத்தது. வங்கிகள் கடன் கொடுப்பதால் பிறரிடம் பொய் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை மாறியது.

இந்நிலையில் தற்போது, வங்கிகளில் விவசாயத்திற்கான நகை கடன் வழங்குவது வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது; அக். 1 முதல் 4 சதவீத வட்டியில் நகைக் கடன் என்ற திட்டம் இருக்காது' என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image result for farmers suffering for loan

ஏற்கனவே,வங்கிகளில் விவசாயிகளுக்காக 7 சதவீத வட்டியில் நகை கடன் வழங்கப்படுகிறது. இதில் வாங்கிய கடனை முறையாக திரும்ப செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி தொகை மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் வரை ஆவணங்கள் இன்றியும் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் இருந்தால் 3 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை நிறுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வங்கிகளில் நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால்...

விவசாயிகள் பயன் பெறுவதற்காக நகை கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் இதர வாடிக்கையாளர்களுக்கும் கடன் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விவசாய நகை கடனுக்கான வட்டி குறைப்பால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட 5 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும். ஆனால் நடப்பு பட்ஜெட்டில் 5 சதவீதத்திற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால் வங்கிகள் நஷ்டத்திற்கு உள்ளாகும்.இதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகிறது.

மேற்கண்ட இந்த நிலையை எடுத்ததற்கு வங்கிகள் சொல்லும் காரணத்தில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இனி விவசாயிகள் பாடு தான் என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக நம் கண் முன் நிற்கிறது.

இந்த காரணத்திற்காக விவசாய நகை கடன் திட்டத்தை நிறுத்த அனைத்து வங்கிகளும் திட்டமிட்டுள்ளன. அதன் துவக்கமாக விவசாய நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது. வரும் அக். முதல் விவசாய நகை கடன் திட்டம் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். அதேநேரத்தில் 9 சதவீத வட்டியில் வழங்கப்படும் அனைவருக்குமான நகை கடன் தொடரும்.

என சொல்லப்படுகிறது 

English Summary

The next thunder to fall on the farmers' head ..! - Change in bank loan ..!

Latest Articles

KOLNews