KOLNews

கனிமொழியை எம்.பி, யை பார்த்து இந்தியரா என கேட்ட அதிகாரி ..!

சிஐஎஸ்எப் (மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படை ) அதிகாரி ஒருவர், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும் படி கூறியதற்கு தான் இந்தியரா என்று  கேட்டதாக திமுக எம்பி கனிமொழி தனது கட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. 

 இது குறித்து அவர் வெளியிட்ட கட்டுரை பதிவில், 

'இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவரிடம் எனக்கு ஹிந்தி தெரியாததால்,ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசும் படி கூறினேன். அதற்கு அவர், நீங்கள் இந்தியரா என்று கேட்டார். எப்போதிலிருந்து ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது' என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார் கனிமொழி.

கனிமொழியின் இந்த பதிவு மீண்டும் ஹிந்தி குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

English Summary

The officer who asked at Kanimozhi MP, whether She is Indian ..!

Latest Articles

KOLNews