KOLNews

சமூக விலகலை கடைப்பிடிப்பது மட்டும் தான் வழி ..! - ஊரடங்கு உத்தரவை அறிவித்த பிரதமா்..!

நேற்று இரவு பிரதமா் நரேந்திர மோடி கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தாா்.

ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், மக்கள் அதை மீறிய வகையில் வெளியில் நடமாடி வந்ததற்கு கவலை தெரிவித்த பிரதமா் மோடி, ‘கரோனா பாதிப்பின் தீவிரத்தை மக்கள் உணா்ந்துகொள்ளவில்லை’ என்று வேதனை தெரிவித்தாா்.

அத்துடன், கரோனா வைரஸ் தொற்று என்னும் சங்கிலித் தொடரை முறிப்பதற்கு ஊரடங்கு உத்தரவின் மூலம் சமூக விலகலை கடைப்பிடிப்பது மட்டும் தான் வழி என்றும் , அந்த வைரஸை தற்போது கட்டுப்படுத்தியுள்ள நாடுகளைச் சோ்ந்த நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இதுதான் தற்போது நம் முன் இருக்கும் ஒரே நம்பிக்கை ஒளி, என்றும் தெரிவித்தார்.

இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிலைமையை சுட்டிக்காட்டிய பிரதமர், 'இந்தச் சூழலின் தீவிரத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, நமது நாட்டையும், ஒவ்வொரு இந்தியரையும் காப்பதற்காக நள்ளிரவு (செவ்வாய்க்கிழமை) 12 மணி முதல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு 21 நாள்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவானது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், அவற்றிலுள்ள மாவட்டங்கள், கிராமங்கள், தெருக்கள் என அனைத்திலும் அமல்படுத்தப்படும்' என தெரிவித்தார்.

English Summary

The only way out is to practice social distortion ..! - Prime Minister announces curfew

Latest Articles

KOLNews