KOLNews

கவிஞர் சினேகனுக்கு பதவி...! - கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாமாம்..!

மக்கள் நன்கு அறிந்த 2ஆம் கட்ட தலைவர்கள் இல்லாத கட்சியாக 'மக்கள் நீதி மய்யம்'  இருந்து வரும் நிலையில் அதன் கட்டமைப்பை வலுப்படுத்த புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளது அக்கட்சி.

அந்த வகையில், மாநில இளைஞரணி செயலாளராக கவிஞர் சினேகன் நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக விரிவாக்கம் செய்திருக்கும் கட்சியின் கட்டமைப்பில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, கவிஞர் சினேகன், மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நற்பணி இயக்க மாநில செயலாளராக தங்கவேலு, வழக்கறிஞர் அணி மாநில செயலாளராக குருவைய்யா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும்,  2021-ம் ஆண்டில், தமிழகத்தின் அரசியலை மாற்றியமைக்கும் லட்சியத்தை வலுப்படுத்தும் வகையில், பொறுப்பாளர்களுக்கு, தொண்டர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். 

English Summary

The post of poet Snegan ...! - Attempt to strengthen the party ..!

Latest Articles

KOLNews