KOLNews

நாங்க சொன்னதை, பிரதமரும் சொல்லியிருக்கிறார்..! - ராமதாஸ்

அடுத்த  21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கப்பட்டிருக்கும் என்கிற பிரதமரின் அறிவிப்பால் நம்பிக்கை பிறந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்குக் கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்க இது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்!

நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விடாமல் தொடர்ந்து வலியுறுத்தினோம்; இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தினோம் அதைத்தான் பிரதமர் அறிவித்திருக்கிறார். இது மிகுந்த நிம்மதியளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

நாடு முழுவதும் 21 நாட்களுக்கான ஊரடங்கு ஆணையைத் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள வாழ்வாதார உதவிகள் ஊரடங்கைப் பாதிக்காமல் மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும்!

என தெரிவித்துள்ளார் ராமதாஸ் 

 

English Summary

The Prime Minister has said what we said ..! - Ramadas

Latest Articles

KOLNews