KOLNews

பிரதமர்...கை தட்ட சொன்னதற்கு காரணம் இது தான்..! - முட்டுக்கொடுக்கும் நம்பிக்கைகள்..!

இன்று நாடு முழுவதும், காலை 7 முதல் இரவு 9 மணி வரை கடைப்பிடிக்கப்படும் இந்த ஊரடங்கின்போது, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக போராடும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வெளியே நின்று 5 நிமிடங்களுக்கு கை தட்டி பாராட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், மோடி கை தட்ட சொல்வதன் காரணம் என்ன என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. 

1. ஜோதிட ரீதியானது...

 ரேவதி நட்சத்திரத்துக்கு சந்திரன் இடம் பெயரும்போது, கை தட்டுவது, மணி அடிப்பது போன்றவற்ளை செய்தால் எழும் ஒலி உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து . சுற்றுப்புறத்தில் நேர்மறை அதிர்வை உண்டாக்குமாம்.

இதற்கு உதாரணமாக கோயில்களில் பெரிய மணிகளை கட்டி, ஒலிக்கச் செய்வதை குறிப்பிட்டு, மணியோசையின் அதிர்வுகள் சுற்றுபுறத்தில் உள்ள வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்க வல்லவை. என கூறுகிறார்கள்..

அத்துடன், மார்ச் 24 அன்று அமாவாசை. இது நெருங்கி வருவதால் இன்று இருள் அதிகமாக இருக்கும். இத்தகைய நாட்களில் வைரஸ், பாக்டீரியா மற்றும் தீய சக்திகள் வேகமாக இருக்கும். இதுபோன்ற நாளில் இருட்டுவதற்கு முன்பு மாலை 5 மணிக்கே 130 கோடி மக்களும் ஒரே நேரத்தில் கை தட்டினால் நாடு முழுவதும் பெருமளவு அதிர்வு ஏற்படும். இது தீயவற்றை அழித்து, நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த பலன் கிடைக்கலாம்..! என எதிர்பார்க்கின்றனர்.

2. தார்மீக ஆதரவு ...

ஒருவரை பாராட்டுவதற்காக கை தட்டுவது என்பது இயல்பான ஒரு வெளிப்பாடே... எனவே, சும்மா இருப்பதற்குப் பதில் நோயை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோரை பாராட்டும் விதமாக தான் கூறியிருக்கிறார். 

'கை தட்ட சொன்னதன் காரணம் எதுவாகினும், அது கொரானாவை விரட்டும் என்றால் செய்ய வேண்டியது தானே..!' என்கிற கருத்தையும் பலர் முன்வைக்கின்றனர்.

English Summary

The reason why the Prime Minister ask to clap ... - sentimental support..!

Latest Articles

KOLNews