KOLNews

'குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதையாக' உள்ளது ..! - முதல்வரை சாடும் டிடிவி.தினகரன்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்ததாக  தமிழக அரசை,  அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய திரு. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், இப்போது 'குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதையாக', அவர்கள் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு புதிய அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார் என விமர்சித்துள்ள டிடிவி தினகரன், இதேபோல, தாங்கள்தான் சிறுபான்மையினரின் காவலன் என்று கூறி, அந்த மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விடுதலையையும் இந்த அரசாணையின் மூலம் கேள்விக்குறியாக்கி இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து முதலமைச்சர் உரிய விளக்கம் அளிப்பாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

English Summary

'The story of pushing the horse down and digging the pit' is ..! - TTV.Dhinakaran who attacks CM.

Latest Articles

KOLNews