திமுக தலைவர் மு.க. வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதன் சாராம்சம் -
அதிமுக ஆட்சியாளர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் வழியாக ஒத்தடம் கொடுப்பதற்கு உபத்திரவம் கொடுக்கிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்க படுவதால் அவர்களால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே முதல்வருக்கு கடிதம் எழுதினேன் ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர் சிவன்ராஜ், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரதிக்ஷா, விஜயலட்சுமி, எஸ் பவானி ஆகியோர் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாக தகவல் வந்துள்ளது. இது போல் மேலும் பல அரசு மாணவர்கள் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் ?, அரசு நினைத்தால் செய்ய முடியும். அப்படி இல்லாவிட்டால் முன்னர் அறிவித்தபடி திமுக அந்த கட்டணத்தை ஏற்க தயாராக உள்ளது.
English Summary
They are disturbing students ..! - Stalin criticizes AIADMK ..!