KOLNews

விஜய்க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை..! - தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

நேற்று நடிகர் அரசியலுக்கு வருவதாக கசிந்த செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில், நடிகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்தது குறித்து அவரது தந்தையம் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். 

முன்னதாக தேர்தல் ஆணையத்தில் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது. கட்சிப் பதிவு மனுவில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பதிவு செய்தது தான்தான் என விஜய்யின் தந்தை திரு. எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், கட்சியைப் பதிவு செய்திருப்பது உண்மை தான் என்றும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த நடவடிக்‍கையை  மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

English Summary

This has nothing to do with Vijay ..! - Father SA Chandrasekhar Description

Latest Articles

KOLNews