விவாதங்களை கிளப்பும் வகையில் பேசுவது பாஜகவின் தேசிய செயலாளாளர் எச்.ராஜா வுக்கு 'கை வந்த கலை' என்பது அனைவரும் அறிந்ததே...அந்த வகையில் அவர் தற்போது,திராவிட அரசியல் குறித்து விளக்கம் ஒன்றை அளித்து திராவிட கட்சியினரை விமர்சித்துள்ளார்.
ராஜா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது ..
திராவிட அரசியல் என்பது...
இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே...
கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்...
சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும்,
இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும்,
கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச்
சொல்லிக்கொண்டே...
ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும்,
தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே...
அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்...
லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு...
ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதும் தான்
திராவிட அரசியல்!
பாஜகவிற்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையில் சில பிரச்சனைகள் உருவாகும் போது, அதை திசை திருப்ப இது போன்று எதையாவது 'கொள்ளுதி போடும்' பணியே எச்.ராஜாவுக்கு பாஜக தலைமையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் , அதையே அவர் செய்வதாகவும், பாஜகவின் எதிர்தரப்பினர் இதை விமர்சிக்கின்றனர்.
English Summary
This is the 'Dravidian politics' - H. Raja's new interpretation!