KOLNews

பாஜகவின் இலக்கு இது தான்..! - ராகுல்காந்தி

மத்திய அரசு, 60 லட்சம் எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து காங்., எம்.பி., ராகுல்காந்தி தனது கண்டனத்தை டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

'14 க்கும் மேற்பட்ட மாநிலங்களில், 11, 12 வகுப்புகளில் படிக்கும் 60 லட்ச பட்டியலினத்தவர், பழங்குடியினர் மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பை முடிக்க உதவும் ஒரு முக்கிய  மத்திய உதவித்தொகை திட்டம் முடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பழங்குடி மக்களும், பட்டியலினத்தவர்களும் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,-ன் நோக்கமாக உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்துவது அவர்களின் கல்விக்கு முடிவு கட்டுவதற்கான வழி'  என பதிவிட்டுள்ளார்.

English Summary

This is the goal of the BJP ..! - Rahul Gandhi

Latest Articles

KOLNews