KOLNews

இப்ப சுலோகம் ..அடுத்து மோடிக்கு கோவில் ..! - பிரதமரை தெய்வமாக பார்க்கும் பாஜக எம்.எல்.ஏ.!

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்ட திட்டமிட்டுள்ளார்.

இறையவனை துதிக்க சொல்லும் சுலோகங்களை போல பிரதமர், மோடியை புகழ்ந்து, உத்தரகண்டில், பா.ஜ., தொண்டர் ஒருவர், 'மோடி ஆரத்தி' என்ற பெயரில் சுலோகம் ஒன்றை எழுதி, அதற்கு விழா எடுத்து வெளியிட்டுள்ளார்.

Modi Aarti' to eulogise the Prime Minister organised by BJP ...

அந்த ஸ்லோகத்தில்,  ஜம்மு - காஷ்மீரில், 370வது சட்டப்பிரிவை ரத்த செய்தது,அமெரிக்காவுக்கு 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மாத்திரைகளை வழங்கியது, ஊழலை ஒழிக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் போன்றவை போற்றி பாடப்பட்டுள்ளது.

அதற்கு 'மோடி ஆரத்தி' என பெயரிட்டு,  அதன் வெளியிட்டு விழாவை, கடந்த, 22ம் தேதி, ஹரித்வாரில் நடத்தியுள்ளனர்.

இந்த விழாவில், பாஜக எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி முன்னிலை வகிக்க , மாநில உயர் கல்வி அமைச்சர், தன் சிங் ராவத் அதை வெளியிட்டார். 

Uttarakhand BJP MLA Ganesh Joshi starts 'Modi Kitchens'

அதையடுத்து, எம்.எல்.ஏ., கணேஷ் ஜோஷி, தனியார், 'டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் "பிரதமர், மோடி தான் எனக்கு கடவுள். நான் அன்றாடம் மோடியை வழிபடுகிறேன். அவர் தான் எனக்கு, நம்பிக்கையும், சக்தியும் அளிக்கிறார். அவரைப் புகழ்வதில் என்ன தவறு! அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட, மோடியின் திறமையைப் பார்த்து பிரமித்திருக்கிறார். மோடி ஆரத்தியை வெளியிட்டதில், எந்த தவறும் இல்லை. அத்துடன், விரைவில் கோவில் ஒன்று கட்டி, அதில், மோடி சிலை வைத்து வழிபடும் திட்டம் வைத்து உள்ளேன்.வைரஸ் பரவல் தடுக்கப்பட்ட பின், மோடி சிலையை செய்யும் பணியை துவக்குவேன். தினமும், 18 மணி நேரம் பணியாற்றும் பிரதமர் மோடி, தெய்வ அருள் பெற்றவர்', என கூறி தன் மோடி பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

English Summary

This is the slogan, and then the temple for Modi ..! - BJP MLA who sees the Prime Minister as a deity!

Latest Articles

KOLNews