KOLNews

நடிகர் சூர்யாவை மிரட்டுவதா..? - பாஜகவை கண்டிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

நடிகர் சூர்யா மீது பாஜக பகிரங்க மிரட்டல் போக்கை கடைபிடிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே . பாலகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார் , 

அதன் சாராம்சம் - 

அண்மையில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என்பது நேரடியாக படைப்பாளிகள் மீதும் , திரைப்படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு படைப்புகளின் மீதும் கொண்டு வரப்பட்டுள்ள நேரடியான தாக்குதலாகும் . இத்தகையதொரு மிக மோசமான சட்டத்திருத்தம் உடனடியாக கைவிடப்பட வேண்டுமென நூற்றுக்கும் மேற்பட்ட திரையுலகினர் ஒன்றிணைந்த கடிதம் வாயிலாகவும் இக்கோரிக்கையை மத்திய அனுப்புவதில் அரசுக்கு விடுத்துள்ளனர் . தணிக்கை குறித்த ஆட்சேபணை இருந்தால் படைப்பாளிகள் மேல்முறையீடு செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழுவை தன்னிச்சையாக கலைத்துவிட்டு , இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய அரசே சூப்பர் தணிக்கைக்குழுவாக செயல்பட்டு அவர்களது சித்தாந்தத்திற்கும் , அரசியலுக்கும் ஒவ்வாத திரைப்படங்களை வெளியிடவிடாமல் தடுக்கும் பாசிச நோக்கம் இதில் உள்ளடங்கியுள்ளது . ஏற்கனவே ஊடக சுதந்திரம் குறித்த தரப்பட்டியலில் 180 உலக நாடுகளில் இந்தியா 142 வது இடத்தில் இருக்கிறது .

இப்பின்னணியில் தமிழக திரைக்கலைஞர் சூர்யா அவர்களும் , " சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவே இருக்க வேண்டுமேயல்லாது , அதன் ரூரல் வளையை நெரிப்பதாக இருக்கக் கூடாது " என தனது  கருத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார் . ஜனநாயக ரீதியாக தனது கருத்தை சமூகஊடகத்தின் வாயிலாக பதிவு செய்த திரைக் கலைஞர் சூர்யாவிற்கு பாஜக இளைஞர் அணியினரின் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு , அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது பாஜகவின் இத்தகைய அணுகுமுறையும் , பகிரங்க மிரட்டல் போக்குகளும் ஒரு போதும் ஏற்கத்தக்கவையல்ல என்பதோடு, , மேற்கூறிய சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தியும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் .

 

 . 

English Summary

Threatening actor Surya ..? - Marxist Communist Party condemning the BJP

Latest Articles

KOLNews