KOLNews

ஸ்டாலினுடன் காங்கிரஸ் மேலிட பிரதிநிதி முக்கிய பேச்சு..!

நேற்று, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு போன்றவர்களுடன் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே ஆர் ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர் இந்த சந்திப்பின் போது நடப்பு அரசியல் நிலவரம் குறித்து பேச பட்டதாகவும், அத்துடன்,  தனியார் நிறுவனம் நடத்திய சர்வே அடிப்படையில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு செல்வாக்கான தொகுதிகளின் பட்டியலை ஸ்டாலினிடம் தினேஷ் குண்டுராவ் அளித்ததாகவும் தெரிகிறது.

மேலும்,  புதுச்சேரியில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் மட்டும் திமுக நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்  

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ்,  தொகுதி பங்கீடு குறித்து இன்றைய சந்திப்பில் எதுவும் பேசவில்லை என்றும், தேர்தல் பிரச்சாரம், கூட்டணியை பலப்படுத்துவது குறித்து விவாதித்தோம் . ராகுல்காந்தி விரைவில் தமிழகம் வருகை தர இருக்கிறார். அது பற்றி பேசினோம்.வியாழக்கிழமை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன் என்றார்

English Summary

Top Congress representative talks with Stalin ..!

Latest Articles

KOLNews