KOLNews

கைதுசெய்யப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்..!

நேற்று. நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்கிற தலைப்பில் நேற்று  முதல் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரும் மே மாதம் 100 நாட்கள் வரை பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அதன்படி திருக்குவளையில் தனது தாத்தாவின் இல்லத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிரச்சாரத்தை தொடங்க வருகை தந்தார்.

 உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் இடம் அருகே வருவதற்கு முன்பே தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மேடையில் ஏறி பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு பிரச்சாரத்தின்போது 3 வாகனங்களில் செல்லக்கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் கலைஞர் இல்லத்தின் உள்ளே சென்று அங்கு உள்ள சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்தார்.  அதன் பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன் பின்னர் மரக்கன்றுகளை நட்டவிட்டு ,அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஏறி தனது பிரச்சாரத்தை தொடங்கினார் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் இருந்தவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.  இதையடுத்து அவர்கள் புரிந்த காவல்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் உதயநிதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

English Summary

Udayanidhi Stalin arrested ..!

Latest Articles

KOLNews