KOLNews

உதயநிதி ஸ்டாலின் கைதும் விடுவிப்பும் .! - தொடர் பணியில் காவல் துறை

திருச்சி, நேற்றைய முந்தைய தினம் திருக்குவளையில் பிரகாரத்தை முன்னெடுத்த தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் 2-வது நாளாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய போது  கைது செய்யப்பட்டார். 

அதையடுத்து, போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் கோபுரவாசல் முன்பும், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை முன்பும் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல், லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 65 பேரையும், லால்குடி, மணிகண்டம், தொட்டியம், முசிறி, உப்பிலியபுரம், தா.பேட்டை, மண்ணச்சநல்லூர் என்று மாவட்டத்தின் புறநகர் பகுதியில் 13 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 825 தி.மு.க.வினரை மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் முழுவதும் சாலைமறியலில் ஈடுபட்டதாக மொத்தம்  965 பேரை போலீசார் கைது செய்து  பின், மாலையில் அனைவரையும் விடுவித்துள்ளது 

English Summary

Udayanidhi Stalin arrested and released! - Police Department on continuous duty.

Latest Articles

KOLNews