KOLNews

வள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்ட மாட்டேன்..! - உஷாரான 'ரஜினி'

அண்மையில் நடிகர் ரஜினி காந்த், பாஜகவில் இணைந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என தமிழக பாஜாக  மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் ,

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பதுபோன்று, என் மீது பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. என்னை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்கிறது. வள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்ட மாட்டேன். பாஜகவில் சேரவோ, கட்சியில் சேர்ந்து தலைவர் ஆக வேண்டும் என்றோ எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். பேசவேண்டிய விசயத்தை விட்டுவிட்டு திருவள்ளுவர் விசயத்தை சர்ச்சையாக்கியது அற்பத்தனமானது. மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது.

திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர், கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். திருவள்ளுவர் போன்ற ஞானிகள் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.

 

English Summary

Valluvar will not, and me too..! - 'Rajini'

Latest Articles

KOLNews