KOLNews

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரானார் வானதி சீனிவாசன்..!

தமிழக பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் , அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாழ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,தமிழக பாஜகவின் துணைத் தலைவரும் அக்கட்சியின் முன்னணி பேச்சாளருமான வானதி சீனிவாசன் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான நியமன உத்தரவை கட்சியின் தேசிய தலைவர் பிறப்பித்துள்ளார்.

இதற்கு முன் தேசிய மகளிர் அணி தலைவராக இருந்த விஜயா ரஹாத்கர் சமீபத்தில் கட்சியின் தேசிய நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, தற்போது இந்த பதவி வானதி சீனிவாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

வானதி சீனிவாசன்  பாஜகவின் முன்னணி பேச்சாளராகவும்,  தொழில்முறையில் வழக்குரைஞர் ஆகவும் உள்ளார். இவரது கணவரும் வழக்குரைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. வானதி சீனிவாசன் இளம்வயதிலேயே அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (ஏபிவிபி) இணைந்து செயலாற்றியவர்  பின்னர் அவர் பாஜகவில் இணைந்து முக்கியத்துவம் பெற்றார். தமிழக பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டிலுள்ள அக்கட்சியின் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருப்பதாக தெரிகிறது.

English Summary

Vanathi Srinivasan becomes BJP national women's team leader

Latest Articles

KOLNews