KOLNews

வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..! - துணை முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்..!

தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு பாமக உள்ளிட்ட அச்சமூகத்தை சார்ந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பதாக சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவு விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக துணை முதல்வர் ஓ பி எஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், "வன்னியர் சமுதாயத்தினர் காண இட  காண இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகளை சில விஷமிகள் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வன்னிய சமுதாய சகோதர சகோதரிகளுக்கு நான் இதுவரையிலும் நம்பிக்கைக்கு உரியவனாகவே இருந்திருக்கிறேன். இனி வரும் காலங்களிலும் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" என தெரிவித்துள்ளார.

English Summary

Vanniyar did not object to the reservation ..! - Deputy Chief Minister OPS explanation ..!

Latest Articles

KOLNews