KOLNews

வெற்றிவேல் காலமானார்..! - சோகத்தில் அமமுக..!

அமமுகவின் பொருளாளராக இருந்து வந்த வெற்றிவேல். கடந்த சில மாதங்களாக கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கொரோனா தொற்றுடன் அவருக்கு சர்க்கரை நோயும் இருந்ததாக சொல்லப்படுகிறது.இந்நிலையில்  அவரது உடல் நிலை மோசமடைந்தததையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முதலில், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெற்றி வேல் பின்னர் அதிமுகவில் இணைந்தார்.. 2011 ல்சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் அப்போதிருந்த அரசியல் சூழல் காரணமாக  இத்தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டிஇருந்தது. அதையடுத்து  தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தார்.பின்னர், 2016-ல் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அணிக்கு மாறினார். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குழுவிலும் இடம் பெற்றார்.

இருப்பினும், அரசுக்கு எதிராக செயல்பட்டதாக 18 எம்.எல்.ஏக்களின் மீது எடுத்த நடவடிக்கை காரணமாக தனது எம்.எல்.ஏ.,பதவியை இழந்தார் தொடர்ந்து தினகரன் துவக்கிய அமமுக கட்சியில் அதன் பொருளாளராக இருந்து வந்தார். இந்நிலையில், இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

English Summary

Vetrivel Passed away..!

Latest Articles

KOLNews