KOLNews

விஜயகாந்த், மீண்டும் நடிக்கிறாரா..? - தவறான தகவல் என பிரேமலதா விளக்கம்.

அண்மையில், தேமுதிக கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் அவரது மனைவி பிரேமலதா.

முன்னதாக இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

நீண்ட இடைவெளிக்கு பின் விஜயகாந்த் நடிக்க போகிறார் என்கிற தகவல் அவரது தொண் டர்களுக்கும், கோலிவுட்டை சார்ந்த பலருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. இருந்தும் அது உறுதிசெய்யப்படாத நிலையில் , முறையான அறிவிப்புக்கு காத்திருந்தனர். 

TN police file case against Premalatha Vijayakanth, BJP State prez Murugan  - News Today | First with the news

இந்நிலையில், விஜயகாந்த் நடிக்க இருப்பதாக வந்த தகவல் தவறானது என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து வியந்தேன். அது தவறான செய்தி . விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார். ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியின் தலைமைக்குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என பிரேமலதா கூறினார்.

English Summary

Vijaykanth acting again ..? - Premalatha's interpretation as misinformation.

Latest Articles

KOLNews