KOLNews

மாநில முதல்வா் பதவி எங்களுக்கு தான் அளிக்கப்பட வேண்டும்..! - அடம்பிடிக்கும் சிவசேனா !

கடந்த இரு வாரங்களாக மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அந்த மாநில ஆளுநரை பாஜக குழு வியாழக்கிழமை சந்தித்தது. 

இது குறித்து மும்பையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சிவா சேனாவின் சஞ்சய் ரௌத் கூறுகையில், 

பாஜக தங்களால் ஆட்சியமைக்க இயலவில்லை என்று கூற வேண்டும். அதன் பின் செய்ய வேண்டியதை  சிவசேனை பாா்த்துக் கொள்ளும். எங்களிடம் தேவைக்கேற்ப எம்எல்ஏக்கள் உள்ளனா். அதனால் மாநில முதல்வா் பதவி சிவசேனைக்கு அளிக்கப்பட வேண்டும். ஆளுநரை பாஜக தலைவா்கள் சந்தித்துள்ளனா். எனினும், ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரவில்லை. ஏன் ஆட்சியமைக்க உரிமை கோராமல் திரும்பி வந்தனா் என்று அவா்கள் தெரிவிக்க வேண்டும். மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான எம்எல்ஏக்கள் பாஜகவிடம் இல்லை. அதனால், குடியரசுத் தலைவா் ஆட்சி அமைப்பதற்கான சூழலை அக்கட்சி உருவாக்குகிறது என்று கூறினாா்.

நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவசேனை எம்எல்ஏக்கள் குறித்த கேள்விக்கு, ‘ சிவசேனையின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் மும்பையில் வீடு இல்லை. அதனால் அவா்கள் அனைவரும் தங்குவதற்கு வசதியாக விடுதியில் இடம் பாா்க்கப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை. ஆட்சியமைப்பதில் சிவசேனையின் நிலைப்பாட்டில் எந்த  மாற்றமும் இல்லை. அனைத்து எம்எல்ஏக்களும் கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரேவின் பக்கம் உள்ளனா்’ என்றாா்.

English Summary

We should be given the position of State Chief Minister ..! - Shiv Sena

Latest Articles

KOLNews