பாஜாக வின் தலைவர் ஜே.பி. நட்டா, தங்கள் கட்சி பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய 65 இடங்களில் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின், மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி , ஆம் ஆத்மீ கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி என மும்முனை போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு முடிவடைந்ததை அடுத்து, தலைநகர் சண்டிகரில் பா.ஜ.க. தலைவர் திரு. ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களில் போட்டியிடும் என்றும் கூட்டணி கட்சிகளான அம்ரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 இடங்களிலும், தின்ட்ஷா ஷிரோமனி அகாலி தல் கட்சி 15 இடங்களிலும் தேர்தலை சந்திப்பதாக நட்டா குறிப்பிட்டார்.
English Summary
We will compete in 65 places ..! - BJP in Punjab