KOLNews

தமிழை மத்திய ஆட்சி - அலுவல் மொழியாக மாற்ற பாடுபடுவோம்..! - முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய ஆட்சி - அலுவல் மொழியாக மாற்ற தமிழக அரசு பாடுபடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

முன்னதாக இதுகுறித்து அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் - 

பல தமிழறிஞர்களும் 10 ஆண்டுகாலமாக வலியுறுத்திய செம்மொழித் தகுதி , கருணாநிதியின் பெருமுயற்சியால் மத்தியில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் வலியுறுத்தப்பட்டது . அதன் தொடர்ச்சியாக தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி வெளியானது . அதற்கான அரசாணை அந்த ஆண்டு அக்டோபர் 12 - ஆம் தேதி வெளியிடப்பட்டது 

 உலகின் மூத்த மொழியும் , திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் மொழியும் , இலக்கிய இலக்கண வளங்கள் கொண்ட சிறப்பான மொழியும் , பழைமைக்குப் பழைமையாய் , புதுமைக்குப் புதுமையாய் தன்னைத் தகவமைத்துக் கொண்டு , கல்வெட்டுக் காலம் முதல் கணினிக் காலம் பேரை சிறப்புற்று விளங்கும் மொழியான அன்னைத் தமிழ்மொழிக்கு சூட்டப்பட்ட அணிகலனே செம்மொழித் தகுதியாகும். அந்தத் தகுதிக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும் . நமது அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய ஆட்சி - அலுவல் மொழியாக மாற்ற தமிழக அரசு பாடுபடும் 

English Summary

We will strive to make Tamil the official language of the Central Government ..! - CM Stalin

Latest Articles

KOLNews