தனது அரசியல் நிலைப்பாடு குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்த உள்ள நிலையில், ரஜினிகாந்த் என்ன முடிவு எடுப்பார் ? என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கருத்துகளை தங்களது யுகங்களாக ஊடகவியலாளர்கள் கூறி வருகிறார்கள்.
முன்னதாக தனது மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று காலை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
தேர்தலுக்கு ஆறு மாதங்களே உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஜினி இந்த முடிவை தான் எடுப்பார் என கூறப்படும் பல வித கருத்துக்கள்..
1. தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை ரசிகர்களின் மனம் நோகாதபடி எடுத்துவைக்க கூடும்.
2. முன்னதாக கட்சி துவக்க அறிவிப்பை அறிவித்திருந்தால், பாஜக கொடுக்கும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதால், அதிமுக - பாஜக கூட்டணி முடிவான நிலையில் தற்போது கட்சி துவக்கத்தை அறிவிக்கலாம்.
3. கருத்தியல் ரீதியாக பாஜக உடனான உடன்பாடுகள் இருந்தாலும், வெளிப்படையாக பாஜகவுடன் தேர்தல் உறவு வைத்துக்கொள்வது தோல்வியை கொடுக்கும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கோரமாட்டார்.
4. புதிய கட்சி துவக்குவதன் மூலம் யார் வரக்கூடாது என எண்ணுகிறோமோ அவர்களே வெற்றிபெறும் வாய்ப்பு உருவாகும் என்பதால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறலாம்.
5. தனது உடல்நிலை குறித்து பேசி, வேறு ஒருவரை முன்னிறுத்தலாம்.
இப்படி பல்வேறு யுகங்களை கிளப்பி , தனது அரசியல் வரவு பேசும்பொருளாகட்டும் என நினைத்து இறுதி முடிவின் அறிவிப்பை ஓரிரு மாதங்கள் தள்ளிவைக்கப்படலாம்
English Summary
What is Rajini going to do? - Different types of guess!