KOLNews

நாம் ஏன் தோற்றோம்..? - பட்டியலிட்டு புலம்பும் பாஜக..!

டில்லியில் கடந்த 8ம் தேதி, நடந்த பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி 63 தொகுதிகளிலும், பாஜ., 7 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால், தொடர்ந்து, 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கிறார். 

இந்நிலையில் பாஜக தோற்றது குறித்து பாஜக தொண்டர்கள் மத்தியிலேயே ஆம் ஆத்மீ சிறப்பாக அரசியல் செய்துவிட்டதாக புலம்ப வைத்துள்ளது. தற்போது அவர்கள் தங்களுக்குளேயே பாஜக தோற்றதற்கான காரணமாக கீழ்கண்டவற்றை பட்டியலிடுகிறார்கள்..

1. லோக்சபா தேர்தலில் மோடியை போல, டில்லி பொதுத்தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு மாற்று யாரும் இல்லாதது ஆம்ஆத்மியின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. .

2. பாஜக  சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காதது 

Image result for kejriwal

3. 2017 ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி படுதோல்வி பின் உஷாரானது ஆம் ஆத்மீ, ஆனால் பாஜக அதீத நம்பிக்கையில் காலம் தள்ளியது.

4. 2013ம் ஆண்டு தேர்தலில் இலவச மின்சாரம், இலவச தண்ணீர் தருவதாக ஆம்ஆத்மி கூறியது. 2015ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றவும் செய்தது. இதனால் ஏற்பட்ட நம்பிக்கையும் தற்போதைய அதன் வெற்றிக்கு காரணம்.

5. கடந்த 6 மாதங்களாக வெகு ஜன வாக்குகளை , கெஜ்ரிவால் அரசு சில இலவச திட்டங்களை அமல்படுத்தியது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச பஸ் மற்றும் மெட்ரோவில் பயணம் செய்யும் வசதி செய்து கொடுத்தது.

Image result for cctv camera for woman security in delhi

6. பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து பல இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது , பெண்களின் வாக்குகளை அவர்கள் பக்கம் திருப்ப மேலும் ஒரு காரணமாகியது.

7.  சிறுபான்மையினர் அதிக அளவில் ஆம்ஆத்மியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

8.  'போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுடவேண்டும்' என கோஷம் எழுப்பி நாடு நிலை வாக்காளர்களை இழந்தது பாஜக.

9. கெஜ்ரிவால், ஹனுமன் பக்தி பாடலை பாடி தன்னை ஹனுமன் பக்தராக காட்டிக்கொண்டு, பாஜக வில் உள்ள ஹிந்து வாக்காளர்களையும் அவர் கவர்ந்து விட்டார்.

10. தேசிய அளவில் பேசப்படும் விஷயங்களான  முத்தலாக், குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமர் கோயில் குறித்த சுப்ரீம் கோர்டின் உத்தரவு ஆகியவற்றை முன்னெடுத்த பாஜகவிற்கு , உள்ளூர் பிரச்சனைகளை கையிலெடுத்து ஆம்ஆத்மி சிறப்பாக வென்றது.

English Summary

Why do we loose ? - BJP lamentation ..

Latest Articles

KOLNews