KOLNews

உடனடியாக விடுதலை செய்யப்படுவாரா சசிகலா.? - ஆர்வத்தில் ஆதரவாளர்கள்

சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் சசிகலாவுடன்  இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் உள்ளனர். மூவரின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது.

இதற்கிடையே, கடந்த ஒரு வாரகாலமாக சசிகலாவின் விடுதலை, தமிழக அரசியலில் ஒரு பேசும் பொருளாக மாறி வருகிறது. முன்னதாக சிறையில் வழங்கப்படும் 129 சலுகை நாட்களை கழித்தால் இம்மாதம் விடுதலையாகலாம் என தகவல் வெளியானது. 

இந்நிலையில், சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகை 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய்க்கு 'டிடி' எடுத்து பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தினார்.அபராதத் தொகை செலுத்தியதற்கான ரசீது பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை கண்காணிப்பாளரிடம் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

தற்போது இது தொடர்பாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் கூறுகையில், "சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்தப்பட்டதற்கான ரசீதை சிறைத் துறையில் வழங்கி உள்ளதுடன், சலுகை விடுமுறை 129 நாட்களை கழித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சிறை கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்துள்ளோம். இனி சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பதை சிறைத்துறை தான் அறிவிக்க வேண்டும். ஜனவரியில் விடுதலையாவார் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சிலர் கேட்டதற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் சட்டவிதிகளின்படி அவருக்கு சலுகை விடுமுறை நாட்களை கழித்தால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்", என  அவர் தெரிவித்துள்ளார்.

English Summary

Will Sasikala be released immediately? - Eager supporters

Latest Articles

KOLNews