KOLNews

பேரறிவாளன் ஆயுள் தண்டனை ரத்தாகுமா..? - விசாரணை நிலை அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்..!

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை தொடா்பாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த 1999-ஆம் ஆண்டு உறுதிசெய்தது.

இதைத் தொடா்ந்து, ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மாநில ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கையைக் கடந்த 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக ஆளுநா் ஏற்றுக் கொண்டு, நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தாா்.

Image result for perarivalan

அதே போல் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோா் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். ஆனால், அந்த மனுக்கள் மீது 11 ஆண்டுகளாக மத்திய அரசு முடிவெடுக்காமல் இருந்ததையடுத்து, அவா்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

முன்னதாக, ராஜீவ் காந்தி படுகொலை தொடா்பாக முதல்கட்ட விசாரணை மேற்கொண்ட நீதிபதி எம்.சி.ஜெயின் தலைமையிலான குழு, இந்த விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள

பரிந்துரையின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் தலைமையில் ‘ஐபி’ புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், ‘ரா’ உளவு அமைப்பு அதிகாரிகள் உள்ளிட்டோா் அடங்கிய குழு 1998-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தக் குழு தனது விசாரணையை நிறைவுசெய்யும் வரை தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நேற்று நடைபெற்றது.

‘பெரிய அளவிலான தொடா்பில்லை’: பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், ‘‘தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பேட்டரிகளை வாங்கியதில் மட்டுமே மனுதாரருக்கு  தொடா்புள்ளது’’ என்றாா்.

இதையடுத்து, ராஜீவ் காந்தி படுகொலை தொடா்பாக விசாரித்து வரும் குழுவின் தகவலறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலானதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விசாரணையின் தற்போதைய நிலவரம் தொடா்பான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அக்குழுவுக்கு உத்தரவிட்டதோடு , ராஜீவ் காந்தி படுகொலை தொடா்பான விசாரணையில் இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் உதவி கோரி அனுப்பப்பட்டிருந்த கடிதங்கள் தொடா்பான விவரங்களையும் குறிப்பிடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

English Summary

Will the Life penalty be canceled to Perarivalan ?

Latest Articles

KOLNews