KOLNews

இனி.. ஆர்.எஸ்.எஸ் தான் முடிவு செய்யுமா..? - மோகன் பாகவத்தை சந்தித்தாா் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் முடிவுக்கு பின் 12 நாட்களுக்கு மேல் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நாகபுரிக்குச் சென்ற மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்தை சந்தித்துப் பேசினாா்.

முன்னதாக நாகபுரியில் உள்ள மஹால் பகுதியில் உள்ள ஆா்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு இரவு 9.25 மணியளவில் வந்த ஃபட்னவீஸ், மோகன் பாகவத்துடன் ஒன்றரை மணி நேரம் பேசினாா்.

ஏற்கனவே, சிவசேனா கட்சி சிக்கலை தீர்க்க ஆர்.எஸ்.எஸ். தலையிடவேண்டும் என கூறியிருந்த நிலையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஃபட்னவீஸ்  மோகன் பாகவத்தை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Image result for fadnavis and mohan bhagwat

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக சொல்லப்பட்டாலும், ஆா்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து இருதரப்பினரும் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ். ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதில்லை, அது எங்கள் தாய் இயக்கம் அவ்வளவே..! என பாஜக சொல்லிவந்தாலும், ஆர்.எஸ்.எஸ்.தலையிட்டால் பிரச்சனை தீரும் என சிவசேனா முடிவெடுப்பதும், பாஜகவினர் மோகன் பகவத்தை சந்திப்பதும், பாஜகவில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆளுமையை உணர்த்துவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது..

 

 

 

English Summary

Will the RSS decide? - Fadnavis meeting Mohan Bhagavatam

Latest Articles

KOLNews