KOLNews

குதர்க்கம்..! - சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமைபடுத்த சொன்ன பாஜ.எம்பி..!

புதுடில்லி: கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை தடுக்க, சோனியா, ராகுல், பிரியங்காவை ஊரடங்கு முடியும் வரை தனிமை முகாமில் வைக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த டில்லி மேற்கு தொகுதி எம்பி.பர்வேஷ் வர்மா கூறியுள்ளார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் அளித்த பேட்டியில், 

'ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மத்திய அரசின் பணிகளில் குற்றம் கண்டுபிடித்து, மக்களை பதற்றப்படுத்தும் வகையில் ஊரடங்கு தோல்வி என பேசி வருகிறார்கள்.

Modi Govt withdraws SPG cover of Sonia Gandhi, Rahul and Priyanka ...

ஏற்கனவே பலதரப்பட்ட  சவால்களை சந்தித்து வரும் மக்கள், இவர்களின் இந்த பேச்சால், மேலும் பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள். இது போன்ற மக்களை பதற வைக்கும் விதமாக பேசும் பேச்சுக்களை தடுப்பதற்காக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரையும் தனிமை முகாமில், ஊரடங்கு முடியும் வைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்', 

என பர்வேஷ் வர்மா கூறினார்.

English Summary

Wrest ..! - BJP MP ask Sonia, Rahul, Priyanka to isolate

Latest Articles

KOLNews