KOLNews

தரமான மஞ்சள் குங்குமம்..! - வீட்டிலேயே தயாரிக்கலாம்..!

தற்போது சந்தைகளில் கிடைக்கும் மஞ்சள் குங்குமத்தில் ரசாயனங்கள் அதிகளவில் கலக்கப்படுவதால், சரும கோளாறுகள் ஏற்படுவதுடன், முழுமையான தெய்வீகதன்மை இல்லாததாக இருப்பதாக பக்தர்கள் நினைக்கிறார்கள். 

இதனை களைய நாமே வீட்டில் தரமான மஞ்சள் குங்குமத்தை தயாரிக்கலாம்..

உடைந்த விரலி மஞ்சள் - 750 கிராம், உடைந்த கஸ்தூரி மஞ்சள் - 250 கிராம், எலுமிச்சை - 30 பழம்,  படிகாரம் - 60 கிராம்,  வெண்காரம் - 60 கிராம், விளக்கெண்ணெய் - 60 கிராம், நல்லெண்ணெய் - 140 கிராம்.. 

 எலுமிச்சைப் பழத்தை நறுக்கி, நன்கு சாறு பிழிந்து கொள்ளவேண்டும். படிகாரம் மற்றும் வெண்காரத்தை தனித்தனியாக பொடித்து,  எலுமிச்சை பழச்சாறில் நன்கு கலக்கவும். உடைந்த விரலி மஞ்சளை சாறில் கொட்டி ஊறவைக்கவேண்டும். சாறு முழுவதிலும் மஞ்சள் உறிஞ்சிய பின் நிழலில் காயவைக்கவும். நன்கு காய்ந்த மஞ்சள் கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்து அரைக்கவும். அரைத்த பொடி விளக்கெண்ணெய் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கைகளால் தேய்க்க தரமான மஞ்சள் குங்குமம் தயார். 

English Summary

Quality yellow saffron ..! - Make it at home ..!

Latest Articles

KOLNews