KOLNews

ராஜயோகம்..! - விவேகானந்தரின் விளக்கம்..!

இன்று , நாம் செய்யும் யோகா, மூச்சு பயிற்சி, தியானம் எல்லாவற்றிலும் மனதை ஒரு முகபடுத்தும் ஒரு முயற்சியும் சேர்ந்து தான் உள்ளது. இது குறித்து விவேகானந்தர் பின் வருமாறு கூறியிருக்கிறார்..

பணம் சம்பாதிப்பதிலும் சரி, கடவுளை வழிபடுவதிலும் சரி, மற்ற எதைச் செய்வதிலும் சரி, மன ஒருமைப்பாடு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்ற அளவுக்கு அந்தக் காரியத்தை நன்றாகச் செய்ய முடியும். இந்த ஒரு முயற்சியால் மட்டுமே, இந்த ஒரு சாவியால் மட்டுமே இயற்கையின் கதவுகளைத் திறக்க முடியும், அதன் ஒளியை வெளியே கொண்டுவர முடியும். இந்த ஒருமைப்பாட்டுச் சக்தியே அறிவுப் பொக்கிஷத்திற்கான ஒரே திறவுகோல். 

ராஜயோகம் இதைப்பற்றிதான் முக்கியமாக விளக்குகிறது. நம் உடம்பு இப்போது இருக்கும் நிலையில் நாம் மிகவும் சஞ்சலப் பட்டவர்களாக இருக்கிறோம், நமது மனம் தனது ஆற்றல்களையெல்லாம் நூற்றுக்கணக்கான பொருட்களின்மீது செலுத்தி, சிதறடித்து, வீணாக்குகிறது. எண்ணங்களை அமைதிப்படுத்தி ஏதாவது ஒரு பொருளின் மீது மனத்தை ஒருமுகப்படுத்த முயலும்போது, நாம் விரும்பாத

பல்லாயிரக்கணக்கான உந்துவேகங்கள் மூளையில் கிளர்ந்தெழுகின்றன; ஆயிரக்கணக்கான எண்ணங்கள் மனத்தில் எழுந்து அதை நிலைகுலைக்கின்றன. அவற்றைத் தடுத்து, மனத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை விளக்குவதே ராஜயோகம்.

 

 

English Summary

Raja Yoga ..! - Vivekananda's explanation ..!

Latest Articles

KOLNews