KOLNews

ஆன்மீகவாதிகள் அப்படிதான்..!

ரமண மகரிஷிக்குத் திருவண்ணாமலையின் மீது பிரியம். அதன் சரிவுகளில் தனியாக உறுதி வருவதில் ஒரு தனி மகிழ்ச்சி அவருக்கு. அருணகிரி யோகி என்ற ஒரு சித்த புருடர் அந்த மலையின் இடது சரிவில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் வாழ்கிறார் என்று ஒரு வதந்தி.

 ஒரு சமயம் ரமணர் மலையைச் சுற்றி உலாவும் போது,அந்த ஆல மரத்தின் இலைகள் பலவற்றை பார்த்துவிட்டார். ஒவ்வொரு இலையும் சுற்றளவில் ஒரு அடிக்கு மேல் இருந்தன. அவரே ஒரு நாள் அந்த ஆலமரத்தை தேடி சென்றார்.பலவித கஷ்டங்கள் பட்டு ,மரத்தை கண்டுபிடித்தார். பிரம்மாண்ட ஆலமரமாக தூரத்தில் தெரிந்தது.அந்த மரத்தை அணுகும் வழி எங்கும் முள்ளும் புதரும் படர்ந்து யாரும் அணுக முடியாதபடி இருந்தது. ரமணர் தளராமல் முன்னே சென்றார்.

 சில அடி போவதற்குள் ஒரு குளவிக் கூட்டு வரிசையை அவர் கலைத்து விட்டார். ஆத்திரமடைந்த குளவிகள் அவரது கால்களையும் தொடைகளையும் கோபாவேசத்தோடு கொட்டின. ரமணர் அப்படியே நின்றார். அசைவில்லை. குளவிகள் கொட்டித் தீர்க்கும் வரை அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவைகளை தாமே கிளம்பி விட்டால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால்தான் நின்றுவிட்டார். தவிர இதற்கு மேல் அவர் செல்லக் கூடாது என்பதை ஒரு கட்டளை ஆகவும் நினைத்தார்.  குளவிகளுக்கு தாம் செய்த தீங்கை நினைத்து வருத்தப் பட்டார்.

English Summary

Spiritualist are just like that!

Latest Articles

KOLNews