KOLNews

இதுவும்.. இறைவணக்கம் தான்..!

உழைப்பவனின் வியர்வை ஆறுவதற்குள்,,கூலி கொடுக்கப்படவேண்டும் என இஸ்லாம் சொல்கிறது. அதே போல முகமது நபி காலத்தில் நடந்த உழைப்பின் அருமையை உணர்த்தும் ஒரு  சம்பவத்தை தெரிந்து கொள்ளுங்கள். 

மதீனாவிலுள்ள ஒரு பள்ளிவாசலில் இரவும் பகலும் ஒருவர் தொழுது கொண்டிருந்தார் . " இவர் யார் ? இவரது குடும்பம் எப்படி வாழ்கிறது ? என்று அவரைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்தார் முகமது நபி . 

அவர் நல்ல பக்திமான் . நாள் முழுவதும் தொழுதுகொண்டே இருப்பார் . அவருக்கு ஒரே சகோதரர் உள்ளார் . அவர் விறகு வெட்டி அவற்றை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் ” என்று நண்பர்கள் சொன்னார்கள் . 

அதைக் கேட்ட நபி , " நண்பர்களே ! இவரிடம் சொல்லுங்கள் . எப்போதும் தொழுது கொண்டிருக்கும் இவரை விட , விறகுவெட்டிப் பிழைக்கும் இவர் சகோதரரே ஆயிரம் மடங்கு சிறந்தவர் . குடும்ப வாழ்வுக்காக நியாயமான வழியில் உழைத்துச் சம்பாதிப்பதும் இறைவணக்கம்தான் என்பதையும் அவரிடம் கூறுங்கள் என்றார் . 

English Summary

This too .. is worship ..!

Latest Articles

KOLNews