தொடர்ந்து பெருமழை . அந்த சிறிய கிராமத்தை நோக்கி வெள்ளப்பெருக்கு வந்துகொண்டிருந்தது!
மக்கள் எச்சரிக்கையோடு அந்த ஊரை விட்டு வெளியேறத் தொடங்கினர். ஒரு பக்தன் மட்டும் தன் வீட்டில் அமர்ந்து,"கடவுளே! என்னை காப்பாற்றும்!” என்று வேண்டிக் கொண்டிருந்தான்.
ஊருக்குள்ளே வெள்ளம் புகுந்து விட்டது. எஞ்சியிருந்த ஒரு சிலரும் மற்றவர்கள் உதவியுடன் தண்ணீரில் இறங்கி கடந்து பாதுகாப்பான இடம் தேடி போனார்கள். பக்தன் போகவில்லை."நம்பிக்கையோடு இருக்கிறேன்! கடவுளே! காப்பாற்றும்” என்று உருக்கமாக வேண்டினான்! வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. பக்தன் கூரைமேல் தொத்தினான்! மீண்டும் வேண்டினான்!

ஒரு பெரிய மரக்கிளை அவன் பக்கத்தில் வந்தது! அதன் மேல் ஒரு நாயும் அமர்ந்திருந்தது! பக்தன் அந்த மரத்தையும் பற்றி கொள்ளவில்லை! ஒரு பெரிய அலை வந்து அவனை வெள்ளத்தில் அடித்துச் சென்றது! அவன் கத்தினான்!"கடவுளே! உன்னை நம்பி உறுதியாய் இருந்தேன்! கை விட்டு விட்டாயே!”. கடவுள் சொன்னார்:"என் உதவி உனக்கு முன்னெச்சரிக்கையாய், மற்றவர்களின் முயற்சியாய், இயற்கையில் மிதந்து வந்த மரமாய் உன்னிடம் வந்ததே! நீ தான் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லையே!”
முயற்சியும் உழைப்பும் இல்லாதவனுக்கு கடவுளின் அருள் எப்படி வந்து சேரும்? என்றார் கடவுள்.
English Summary
To whom does God's grace belong?