KOLNews

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி..! - இந்தியா வெற்றி

7 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில்   வெற்றி பெற்று, இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்  போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே, புனேயில் நடைபெற்ற வந்தது. இதில் இரு அணிகளும் தலா ஒருபோட்டியில் வெற்றிபெற்ற நிலையில்,  நேற்று, 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில்  பந்து வீச்சு தேர்வு செய்தது. அதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் குவித்தது. 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்‍குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 322 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றது. மேலும், 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தொடரையும் கைப்பற்றியது.

English Summary

3rd ODI against England ..! - India wins

Latest Articles

KOLNews