KOLNews

ஆடிப்போன ஆஸ்திரேலியா ..! - ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் சாதித்தது இந்தியா..!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில், மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தி இந்திய அணி சாதித்துள்ளது. இதன் மூலம் அரையிறுதிக்கு நுழைந்துள்ளது

உணர்ச்சிபூர்வமாக முடித்த இந்த ஆட்டத்தின்  22 - வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக இந்தியாவின் குர்ஹித் கௌர் கோல் அடித்து அசத்தினார் . இந்த ஆட்டத்தின் சிறப்பம்சமாக இந்திய அணியின் தடுப்பாட்டம் இருந்தது. குறிப்பாக  கோல் கீப்பர் சவிதா பல ஷாட்களைத் தடுத்தது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

கடந்த 2016 - ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில் தற்போது, முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து உலக ஹாக்கி ரசிகர்களின் புருவங்களை உயர்த்தசெய்துள்ளது.

ஆட்டம் முடிந்த நிலையிலும், வெற்றி உணர் பெருக்கில் இருந்த இந்திய வீராங்கனைகள் பலரின் கண்களில்  கண்ணீரை பார்க்க முடிந்தது. 

English Summary

Australia lost ..! - India wins Olympic women's hockey tournament ..!

Latest Articles

KOLNews