KOLNews

வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை..!

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), வங்கதேச டி20, டெஸ்ட் அணி கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன், மேட்ச் பிக்ஸிக் முறைகேட்டில் ஈடுபட அணுகியவா்கள் தொடா்பாக தகவல் தெரிவிக்காத காரணத்துக்காக 2 ஆண்டுகள் அவருக்கு தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது.

ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட ஓராண்டு முழு தடையும், 12 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட தடையும் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்ற ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியில் அற்புதமாக ஆடியவா் ஷகிப் அல் ஹசன். ஆல்ரவுண்டா்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளாா்.

சமீபத்தில் அவர் டி20, டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டாா்.

 2 ஆண்டுகளுக்கு முன்பு சா்வதேச ஆட்டம் நடைபெற்ற போது, ஷகிப் அல் ஹசனிடம் மேட்ச் பிக்ஸிங் முறைகேடு தொடா்பாக புக்கி ஒருவா் அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை ஷகிப் ஹசன், ஐசிசி ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவிடம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய ஐசிசி கிரிக்கெட் ஆட 2 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து ஷகிப் அல் ஹசன் கூறுகையில், 

"அளவுக்கு அதிகமாக நான் நேசிக்கும் கிரிக்கெட்டை ஆட தடை விதிக்கப்பட்டது மனவேதனையை  ஏற்படுத்துகிறது.  புக்கிகள் என்னை அணுகியது தொடா்பாக நான் தகவல் தெரிவிக்காமைக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் ஏற்கிறேன். ஊழல் முறைகேட்டை தடுக்க வீரா்களை தான் ஐசிசி ஏசியு சாா்ந்துள்ளது. எனது கடமையை சரிவர செய்யவில்லை" என்றார்  

Image result for Bangladesh captain Shakib Al Hasan banned for 2 years

தற்போது இந்த தடை உத்தரவால், வரும் 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடா், ஆஸ்திரேலியாவில் 2020 அக்டோபா் 18 முதல் நவம்பா் 15 வரை நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் ஷகிப்பால் பங்கேற்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

ஷகிப், 3 வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் 11000 ரன்கள், 500 விக்கெட்டுகளுக்கு மேல் குவித்துள்ள நிலையில்,அவருக்கு விதிக்கப்பட்ட தடையால் வங்கதேச அணிக்கு பாதிப்பு ஏற்படும் என வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

 

English Summary

Bangladesh captain Shakib Al Hasan banned for 2 years

Latest Articles

KOLNews