KOLNews

சென்னையின்..நேத்ரா குமணன்..! - கவனிக்கப்படவேண்டிய இந்திய வீராங்கனை..!

இந்தியாவில், இது வரை ஆண்களே அதிகம் சாதித்துள்ள படகு ஓட்டும் போட்டியில், சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன்,என்கிற வீராங்கனை புதிய உச்சங்களை தொட்டு வருகிறார்.

ஓமன் நாட்டில், முசானா ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. பாய்மரப் படகு ஓட்டும் போட்டியில் லேசர் ரேடிகல் பிரிவில் சக இந்தியரான ரம்யா சரவணனை விடவும் 21 புள்ளிகள் முன்னணியில் உள்ளார் நேத்ரா குமணன். இதன் மூலம் கடைசி சுற்றுக்கு முன்பே முதலிடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு நேத்ரா தகுதி பெற்றுள்ளார்.

Nethra Kumanan Becomes 1st Woman Sailor to Qualify for Olympics | India  News Online

இதனால், படகு ஓட்டும் போட்டிக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை நேத்ரா குமணன் அடைந்துள்ளார். இதற்கு முன்பு படகு ஓட்டும் போட்டியில் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒன்பது பேரும் ஆண்களே என்பது கவனிக்கதக்கது .2014 மற்றும் 2018-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்றுள்ளார் நேத்ரா குமணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. .

English Summary

Chennai's..Netra Kumanan ..! - Indian player to watch out for ..!

Latest Articles

KOLNews