KOLNews

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி..! பிரேசிலை வீழ்த்தி அர்ஜென்டினா பட்டம் வென்றது

ரியோடிஜெனீரோ நேற்று நடந்த  47 - வது கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 15வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது  மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பிரேசிலும் , அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில்,  நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அவை மோதின 

கொரோனா வைரஸ் அச்சத்தால் போட்டி நடந்த ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள மார்கானா அரங்கில் 10 சதவீதம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு இருந்தது . 

போட்டி ஆரம்பம்  முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட  முதல் பாதியின் 2 - வது நிமிடத்தில் , அர்ஜென்டினா வீரர் ரோட்ரிகோ - பால் தன்னிடம் இருந்து பந்தை ஏஞ்சல் டி மரியாவுக்கு பாஸ் செய்ய .அந்த பத்தை ஏஞ்சல் டி மரியா , பிரேசில் வீரர் டெர்னை லாவகமாகத் தாண்டி பந்தை கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் சக்தார்  இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது . இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை 

அதன் பின், 2 வது பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி  தடுப்பாட்டத்தைக் கையாண்டு,பிரேசில் அணி வீரர்கள் கோல் அடிக்க முயன்ற போது , சுவர் போல் தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்புகளை தகர்த்தனர் . பின் கடைசி நேரத்தில் பிரேசில் அணிக்கு கார்னர் கிக் கிடைத்தது , அதை நெய்மர் கோல் அடிக்க சுழற்றி அடிக்க , பிரேசில் கேப்டன் தியாகோ சில்வா தலையில் முட்டி கோல் அடிக்க முயன்றார் . ஆனால் , பந்து கோல் போஸ்ட்டுக்கு மேல் பட்டுச் சென்று ஏமாற்றமளித்தது , இதைத் தொடர்ந்து பிரேசில் அணியை 0--1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது . 

English Summary

Copa America football match ..! Argentina beat Brazil to win the title

Latest Articles

KOLNews