KOLNews

பிரகாஷ் படுகோன்னுக்கு கொரோனா தொற்று..!

முன்னாள் இந்திய பேட்மிட்டன் ஜாம்பவானும், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தந்தையுமான பிரகாஷ் படுகோன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாரக் கடைசியில் அவர் சிகிச்சை முடிந்து வெளியே வருவார் என நினைத்திருந்த நிலையில் அவரது மனைவி உஜாலா படுகோனும் அவரது இளைய மகள் அனிஷா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் ஆகவே அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

 பத்து நாட்களுக்கு முன் பிரகாஷ்ற்கும் அவரது மனைவி ஆஷாவுக்கும்  நோய்க்கான அறிகுறிகள் தெரிந்திருந்த நிலையில், அவர்கள் சோதனைக்கு தங்களை உட்படுத்தி கொண்டனர். அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது அதையடுத்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதையடுத்து அவர்கள் பெங்களூறில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர்

பிரகாஷ் படுகோன் ,  1980இல் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம், அதனை வென்ற  முதல் இந்தியர் என்கிற பெரும் பெற்றவர். அத்துடன் 1983 வேர்ல்டு சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் பதக்கத்தை வென்றார்.

 

English Summary

Corona infection for Prakash Padukone ..!

Latest Articles

KOLNews