KOLNews

நடராஜனை மட்டம் தட்டி பேசுவதா ? - சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

இன்று நடத்த 3வது ஒரு நாள் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றநிலையில், அதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவித்து வருகிறது. 

ஆனால் காலையில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் நடராஜன் தேர்வு குறித்து விமர்சித்த முன்னாள் இந்திய அணி ஆட்டக்காரர்  சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசிய பேச்சு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து  பிரபாகரன் என்பவர் பதிவிட்டுல முகநூல்பதிவில், பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

காலைல மேட்ச் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, நடராஜன் டெபுட்டுக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வழக்கம்போல மட்டம் தட்டிப் பேச ஆரம்பிச்சான் .ஐபிஎல் பாத்து எல்லாம் இண்டர்நேஷனல் மேட்ச்சுக்கு ஆள் எடுக்குறாங்க, அதுவும் நடராஜன் டெத் ஓவர்ல மட்டும்தான் நல்லா போட்டுருக்கான். நம்ம டீம்ல ஏற்கனவே டெத் ஓவர்ல பவுலிங் போட பும்ரா, ஷமி எல்லாம் இருக்காங்க, அப்படி இருக்கும் போது எதுக்கு நடராஜனை எடுக்கனும்.

பவர்பிளேல விக்கெட் எடுக்கத்தான் ஆள் வேணும். அதுக்கு நடராஜன் செட் ஆவார்னு தோணலனு வாய் விட்டான்.

காலைல எல்லாரும் நடராஜனுக்கு Debut Cap கொடுத்த மொமண்ட் வச்சு வாழ்த்து போஸ்ட் போடும்போது, மனம் தடுத்துச்சு. கொஞ்சம் பொறு, அவன் பவர்பிளேல தன்னோட முதல் விக்கெட்டை எடுக்கட்டும் அப்புறம் சஞ்சு மஞ்சுவை சேத்து வச்சு அடிச்சு, நடராஜனுக்கு வாழ்த்துப் போஸ்ட் போடலாம்னு வெயிட் பண்ணது வீண் போகல.

இந்தா!!!! நட்டு, தன்னோட முதல் விக்கெட்டா, லபுசேனை தூக்கிட்டான்!!!!

இது ஊர்க்குருவி இல்லடா, உங்களை மாதிரி ஆதிக்க மனப்பான்மைல இருக்குறவனுகளை அடிக்க வந்த குருவி!!!!!

இந்த பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது.

English Summary

Degrading Natarajan ? - Netizens frying Sanjay Manjarekar ..!

Latest Articles

KOLNews