KOLNews

என்னை பரிசீலிக்க வேண்டாம்..! - தேர்வாளர்களுக்கு ஹர்திக் பாண்டியா வேண்டுகோள்..?

அண்மையில் நடந்து முடிந்த 2021 டி20 உலகக் கோப்பையில், எதிர்பார்த்த திறனை  இந்திய அணியின் ஆல்ரவுண்டரான  ஹர்திக் பாண்டியாவால் வெளிப்படுத்தமுடியாத நிலையில், முழு உடற்தகுதி பெரும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது உடற்தகுதியில் ஈடுபட்டு வருவதாகவும், அது வரை என்னை பரிசீலிக்க வேண்டாம் என்று இந்திய அணி தேர்வாளர்களிடம் ஹர்திக் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.   

நடந்து முடிந்த உலக கோப்பையில்  4 ஓவர்கள் மட்டுமே வீசிய ஹர்திக் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.   தனக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்ததிலிருந்து முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வரும் ஹர்திக், தற்போது முழு நேர பந்துவீச்சுக்கு திரும்புவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

Hardik Pandya issues statement after watches seized at airport by customs

இந்நிலையில், தென் அரிக்கா சுற்றுப்பயணத்தில் பாண்டியா பங்குபெறுவது குறித்து உறுதியான தகவல் ஏதும் தெரியவில்லை. இருப்பினும் வெங்கடேச ஐயர் SA சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளார்.  இதற்கிடையில், பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்க வாய்ப்பில்லை என்றும். கடந்த இரண்டு சீசன்களில் அவரது செயல்பாடுகள் குறைந்துவிட்டதால் அவர் மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு வருவார் என எதிர்பார்க்கபடுவதாகவும் கூறப்படுகிறது. 

English Summary

Do not consider me ..! - Hardik Pandya appeals to selectors ..?

Latest Articles

KOLNews