KOLNews

தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்..!

வங்கதேசம் இந்தியா ஜப்பான் கொரியா பூடான் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற  ஷேக் ரஸேல் சர்வதேச ஏர் ரைபிள் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் தரவரிசை யில் உலகின் முதல் நிலை வீராங்கனையாக உள்ள நிலையில், வங்கதேசத் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு அமைப்பு (பிஎஸ்எஸ்எப்)  மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்திருந்த போட்டியின் மகளிர் பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இப்போட்டியின் மகளிர் பிரிவில் இளவேனில் வாலறிவன் 627. 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த நிலையில், ஜப்பானின் ஷியோரி ஹிராட்டா  622.6 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், இந்தோனேஷியாவின் வித்யா டோயிபா 621.1 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். அதே போல  ஆடவர் பிரிவில் இந்திய வீரர் ஷாகு  துஷர்மனே 123.8 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜப்பான் வீரர் நாவ்யா ஓகாடா  630. 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, வங்கதேச வீரர் பாதி அப்துல்லாஹ் ஹெல் 619.3 புள்ளிகளைப் பெற்று வெண்கலப்பதக்கம் பெற்றார்.

English Summary

Elavenil Valarivan wins gold..!

Latest Articles

KOLNews