ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 59.
முன்னதாக ஐ.பி.எல்.தொடருக்காக மும்பை வந்திருந்த டீன் ஜோன்ஸ், கடந்த 15 நாட்களாக தெற்கு மும்பையில் உள்ள டிரிடென்ட் ஓட்டலில் தங்கிஇருந்தார். அத்துடன் நடப்பு ஐ.பி.எல். போட்டி தொடரில் வருணனையாளராக பணியாற்றி வந்தார்..இந்நிலையில் இன்று மதியம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார்.
டீன் ஜோன்ஸ் 52 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9 ஆயிரத்து 699 ரன்கள் குவித்துள்ளார். அதே போல 1986, செப். 18-22, சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் 'டை' ஆனது. இதில் 210 ரன் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
1987ல் உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். 1997-98ல் ஓய்வு பெற்றார். பின் வர்ணனையாளராக பணியாற்றினார். அவரின் இழப்பு கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Former Australian cricketer Dean Jones died on heart attack