KOLNews

இன்று முதல்..அமெரிக்க ஓபன் டென்னிஸ்..! - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று  தொடங்கி 13-ந்தேதி வரை நடக்கிறது. 

முன்னதாக கொரோனா வைரஸ் தாக்கத்தினால் விம்பிள்டன் உள்பட பல தொடர் ரத்தான நிலையில் இந்த  ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி நடக்க உள்ளது டென்னிஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

இருப்பினும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. வீரர், வீராங்கனைகள் தங்கியிருக்கும் ஓட்டல், விடுதி மற்றும் ஸ்டேடியம் தவிர்த்து வேறு எங்கும் செல்லக்கூடாது, விளையாடும் போது, சாப்பிடும் போது தவிர எப்போதும் முககவசம் அணிந்திருக்க வேண்டும், ஸ்டேடியம் பகுதியில் நுழையும் போது உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்புதல் இன்றி வெளியே சென்றால் போட்டியை விட்டு நீக்கப்படுவார்கள் என கட்டுப்பாடு கெடுபிடிகளுடனேயே போட்டியை எதிர்கொள்கிறார்கள் போட்டியாளர்கள்.

இந்த போட்டியில் வழங்கப்படும் பரிசுத்தொகை மட்டும் ரூ.390 கோடி .  இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லுபவர்கள் தலா ரூ.22 கோடியுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் பெறுவார்கள். இறுதி சுற்றில் தோல்வி அடைபவருக்கு ரூ.11 கோடி கிடைக்கும். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, செலக்ட்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

English Summary

From today, the US Open tennis ..! - Happy fans

Latest Articles

KOLNews