KOLNews

ஆட்டம் ஒரு பக்கம், சூதாட்டம் ஒரு பக்கம். ..! - ஐபில் அட்டகாசங்கள்..!

கிரிக்கெட் சூதாட்ட குற்ற செயல்கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்தாலும், அவை, நடைபெறும் போட்டிகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை, என்பது போல் கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து கிரிக்கெட்டை ரசித்து வருகிறார்கள். 

ஆகவே, ஆட்டம் ஒரு பக்கம், சூதாட்டம் ஒரு பக்கம் என என நடந்துகொண்டிருக்கிறது  

இதற்கிடையே, இன்று ராஜஸ்தானில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  2020 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கி, ஐக்கிய அரபு அமீரக மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதனை மையமாக வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி ராஜஸ்தானில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேர், மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த 2 பேர், என மொத்தம் நான்கு பேரை ஜெய்ப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

அத்துடன் அவர்களிடமிருந்து நான்கு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 19 மொபைல் போன்கள் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் எண்ணும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

English Summary

Game one side, gambling on other side..! - IPL

Latest Articles

KOLNews