KOLNews

தங்கப் பதக்கம் வென்றார் ராஹி சர்னோபத் - துப்பாக்கி சுடுதல்.!

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ராஹி சர்னோபத் தங்கப் பதக்கம் வென்றார் . 

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி குரோஷியாவில் நடைபெற்று வரும் நிலையில்,  இதில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் இந்தியாவின் ராஹி சர்னோபத் 39 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றார் . 

இப்போட்டியில், பிரான்ஸின் மெதில்டே வமோலே 31 புள்ளிகளுடன் வெள்ளியும் , ரஷியாவின் விடாலினா பத்சராஷ்கினா 28 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர் . அதே போல, இப்பிரிவில் பங்கேற்றிருந்த மற்றொரு இந்திய வீராங்கனையான மானு பாக்கர் 11 புள்ளிகளுடன் 7 - ஆம் இடமே பிடிக்க முடிந்தது.. இந்திய வீராங்கனை ரவி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்றது உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கமாகும் . முன்னதாக ஒரு வெள்ளி , இரு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

English Summary

Gold medalist Rahi Sarnobat - Sniper!

Latest Articles

KOLNews