KOLNews

நெருக்கடியை உணர்ந்தேன் ! - டோனி குறித்து வருண் சக்ரவர்த்தி..!

நேற்று முன்தினம் நடந்த சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, அந்த அணியின் கேப்டன் டோனியின் (11 ரன்) விக்கெட்டை வீழ்த்தினார். 

முன்னதாக,  ரூ.4 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 29 வயதான வருண் சக்ரவர்த்தி,  இந்த சீசனில் இதுவரை 4 ஆட்டத்தில் ஆடி 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

IPL: Varun terms bowling to Dhoni a 'surreal' experience - DTNext.in

இந்நிலையில், டோனி வீக்கத்தை வீழ்த்தியது குறித்து அவர் குறிப்பிடுகையில், " சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களோடு அமர்ந்து ஐ.பி.எல். ஆட்டத்தை பார்த்து இருக்கிறேன். டோனியின் பேட்டிங்கை பார்க்க அடிக்கடி செல்வது உண்டு. இப்போது நானே அவருக்கு பந்து வீசியிருக்கிறேன். இது எனக்கு நம்ப முடியாத ஒரு தருணம். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. இது 180 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம். பந்து பெரிய அளவில் சுழன்று திரும்பவில்லை. டோனியும் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஆனால் சரியான அளவில் பந்தை ‘பிட்ச்’ செய்து வீசினால் விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பு உண்டு என்று நினைத்தேன். நல்லவேளையாக திட்டத்தை கச்சிதமாக செயல்படுத்தி அவரது விக்கெட்டை எடுத்தேன். அவருக்கு பந்து வீசிய போது எனக்குள் நெருக்கடியை உணர்ந்தேன்.அத்துடன், இந்த ஆட்டம் முடிந்ததும் டோனியுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அவரை பற்றி தமிழில் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். தல...தல தான்'.

என தெரிவித்துள்ளார் வருண் சக்ரவர்த்தி.

English Summary

I felt the crisis! - Varun Chakraborty about Dhoni ..!

Latest Articles

KOLNews