KOLNews

எனக்கும் மனஅழுத்தம் ஏற்பட்டது..! - 'மேக்ஸ்வெல்லின்' முடிவை வரவேற்கும் கோலி..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரர் 'கிளைன் மேக்ஸ்வெல்', மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விடைபெற்ற நிலையில்,  இது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு கோலி பதிலளிக்கையில், 

"சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது ஒவ்வொரு வீரரும் தங்களது மனநிலை குறித்து வெளிப்படையாக பேச வேண்டும். அந்த வகையில் மேக்ஸ்வெல் தான் மனநெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக வெளிப்படையாக கூறி கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்க எடுத்த முடிவு உண்மையிலேயே அற்புதமானது. அதை வரவேற்கிறேன். 

Image result for kohli maxwell

இதே போன்ற ஒரு சூழலை  நானும் கடந்து வந்திருக்கிறேன். 2014-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் போது  உலகமே முடிந்து போய் விட்டது போன்று உணர்ந்தேன். அடுத்து என்ன செய்வது, யாரிடம் என்ன சொல்வது? எப்படி பேசுவது என்று தெரியாமல் பரிதவித்தேன். வெளியே சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தயங்கினேன். என்னால் சரியான மனநிலையில் இருக்கமுடியவில்லை , அதனால் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன் என்று கூறவில்லை அவ்வளவு தான். மற்றபடி மனஅழுத்தம் எனக்குள் ஆட்டிப்படைத்தது.ஆனால்,இத்தகைய விஷயத்தில் மேக்ஸ்வெல் மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். நல்ல மனநிலையில் இல்லாத போது எவ்வளவு தூரம் தான் தொடர்ந்து முயன்று பார்ப்பது? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போட்டியில் இருந்து விலகி இருப்பது அவசியமாகிறது. கிரிக்கெட்டை முழுமையாக கைவிட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் தெளிவு வேண்டும். வீரருக்கு இடைவெளி தேவைப்படும் போது அதை தைரியமாக சொல்ல வேண்டும். அவரது முடிவை எதிர்மறையாக பார்க்காமல் மதிப்பு அளிக்க வேண்டும்". என கோலி தெரிவித்தார்.

English Summary

I was depressed ..! Kohli welcomes Maxwell's decision

Latest Articles

KOLNews